Home /News /entertainment /

AR Rahman: ரசிகர்களை இன்று நேரில் சந்திக்கவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

AR Rahman: ரசிகர்களை இன்று நேரில் சந்திக்கவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

AR Rahman: அமைதியான சுபாவம் கொண்ட ரஹ்மான், தனது இசையால் மற்றவர்களை பேச வைத்தவர்.

    தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு யூ-ட்யூப் நேரலையில் வருவதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டுச் சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தனது துள்ளல் இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர். அமைதியான சுபாவம் கொண்ட ரஹ்மான், தனது இசையால் மற்றவர்களை பேச வைத்தவர்.

    1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்தார். சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை, அதுவும் 2 விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலை நிமிரச் செய்தார்.

    இப்படி பல பெருமைக்கும், புகழுக்கும் சொந்தக்காரரான ஏ.ஆர்.ரஹ்மான், இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு யூ-ட்யூப் நேரலையில் தோன்றி மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கக் காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. மாலை 6 மணிக்கு யூ-ட்யூப் நேரலையில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். உங்களிடமிருந்து சில கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman

    அடுத்த செய்தி