ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாரி செல்வராஜ் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

மாரி செல்வராஜ் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

மாரி செல்வராஜ், உதயநிதி இருவரது படங்களுக்கும் இதுவரை ரஹ்மான் இசையமைத்ததில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஏ.ஆர்.ரஹ்மான் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்துக்கு இசையமைப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக உதயநிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்தது. அரசியலில் தீவிரமாக இறங்க தீர்மானித்திருக்கும் உதயநிதி சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லப்போகிறார். தனது கடைசிப் படம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என அவர் மாரி செல்வராஜை அணுகியதாகவும், அவரும்  இயக்க ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

சமீபத்திய தகவல் என்னவென்றால், இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ், உதயநிதி இருவரது படங்களுக்கும் இதுவரை ரஹ்மான் இசையமைத்ததில்லை. மாரி செல்வராஜின் அரசியல் படங்களுக்கு ரஹ்மானின் இசை எந்தளவு பொருந்திப் போகும் என்பது கேள்விக்குறி. அதே நேரம் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா படங்களுக்கு தனது இசையின் மூலம் வேறொரு நிறத்தை ரஹ்மான் தந்திருந்தார்.

உதயநிதி நடிப்பில் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. முதல் படமாக நெஞ்சுக்கு நீதி வெளியாகிறது. அடுத்து கண்ணை நம்பாதே. அதையடுத்து அதியமானின் ஏஞ்சல் வெளியாகும். இதற்கிடையே மாரி செல்வராஜ் படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: AR Rahman