குக் வித் கோமாளி கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

கனி - ஏ.ஆர்.ரஹ்மான்

குக் வித் கோமாளி சீசன் 2 ஃபைனல் எபிசோட் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் வீடியோ கால் வழியாக பேசியாக ஏ.ஆர்.ரஹ்மான் போட்டியாளர் கனியிடம் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

  • Share this:
சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். முதல் சீசனை விட இரண்டாவது சீசன் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே கூறலாம்.

இதில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். முதலில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்கள். பின்னர் நடந்த வைல்ட் கார்டு ரவுண்டில் ஷகிலாவும், பவித்ரா லட்சுமியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி 2-ம் சீசனில் டைட்டில் வின்னராக கனியும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை ஷகிலா, அஸ்வின் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஃபைனலுக்கான எபிசோட்கள் ஏப்ரல் 14-ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அதன் ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் வீடியோ கால் வழியாக போட்டியாளர் கனியிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் ஃபைனலுக்கும் காரக்குழம்பு தானா என்று நகைச்சுவையாக கேட்கிறார்.



மேலும் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் குக் வித் கோமாளி ஃபைனலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: