• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • AR Rahman: இளம் சீரியல் நடிகைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த வாய்ப்பு!

AR Rahman: இளம் சீரியல் நடிகைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த வாய்ப்பு!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ரஹ்மான் தனது சுயாதீன ஆல்பமான "மூப்பில்லா தமிழ் தாயே" எனும் பாடலில் நடிக்கும் வாய்ப்பை கேப்ரியல்லாவுக்கு வழங்கியுள்ளார்.

  • Share this:
    சீரியல் நடிகை ஒருவருக்கு அட்டகாசமான வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

    டிக் டாக்கில் பிரபலமாகி ரசிகர்களை பெற்றவர் கேப்ரியல்லா செல்லஸ். இதையடுத்து 'கலக்க போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் 'ஐரா’ என்ற திகில் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தின் இளைய பதிப்பின் பாத்திரத்தை சித்தரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

    தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கேப்ரியெல்லா. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் ஒரு அட்டகாச வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ரஹ்மான் தனது சுயாதீன ஆல்பமான "மூப்பில்லா தமிழ் தாயே" எனும் பாடலில் நடிக்கும் வாய்ப்பை கேப்ரியல்லாவுக்கு வழங்கியுள்ளார்.




    இதனால் உற்சாகமான கேப்ரியல்லா ஆஸ்கார் நாயகனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். "நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காதது நிஜத்தில் நடந்தது" என அதில் குறிப்பிட்டிருந்தார். அதோடு தனக்கு வாய்ப்பு வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை இசைப்புயலும் அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by ARR (@arrahman)






    இதேபோல், குழந்தை பாடகர் பூவையாரும் அந்த பாடலுக்காக ரஹ்மானுடன் இணைந்துள்ளார். அந்தப் படத்தையும் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்தப் படம் 7 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: