முதன்முறையாக மீசையுடன் ஏ.ஆர்.ரஹ்மான்... வைரலாகும் படம்!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  மீசையுடன் கூடிய ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தோற்றத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

  தனது இனிமையான இசையால் பலகோடி ரசிகர்களை கவர்ந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பொதுவெளியில் பாரம்பரிய உடைகளில் கம்பீரமாக தோன்றுவார். சிலநேரம் விழக்களுக்கு ஏற்றவாறு அவரது உடைகள் மாறினாலும், எப்போதும் க்ளீன் ஷேவில் தான் பொதுவிடங்களில் காணப்படுவார்.

  இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ”ஜூம் மீட்டிங் பயன்பாட்டின் நேரடி ஸ்டுடியோ AI Efx மூலம்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

  பெரும்பாலான ரசிகர்கள் ரஹ்மானின் புதிய தோற்றத்தை வரவேற்றுள்ளனர். பாடகர்கள் ஷ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம் உள்ளிட்டவர்களும் ரஹ்மானின் இந்த மீசை தோற்றம் குறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளனர்.   
  View this post on Instagram

   

  A post shared by ARR (@arrahman)


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', விக்ரமின் 'கோப்ரா', சிவகார்த்திகேயனின் 'அயலன்' மற்றும் ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் அட்லீயின் பாலிவுட் அறிமுகமான 'ஜவான்' உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: