நடிகர் விவேக்கின் காமெடி வீடியோ ஒன்றை பகிர்ந்து, அவரை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் தனது வாழ்நாளில் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் மாரடைப்பால் மறைந்தார். இது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டிய அவர், பாதியிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டதால், கண்ணீர் வடித்தனர்.
இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் விவேக் இடம்பெற்றுள்ள காமெடி காட்சி ஒன்றை பகிர்ந்து, ”நகைச்சுவை ஜாம்பவான் விவேக்கை மிஸ் செய்கிறேன். எத்தனை பெரிய இழப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் பகிர்ந்துள்ள காட்சியில், விஜயகாந்திடம் கதை சொல்ல வந்திருக்கும் விவேக்கிடம், தமிழில் பேசி நடிப்பதற்கு ஏதுவாக கதையை தயார் பண்ண சொல்கிறார் கேப்டன். அதற்கு உங்களுக்கு தமிழ் பிடிக்கும்ன்னு தெரியும், ஆனா இந்த காலத்து பசங்களுக்கு இங்கிலீஷ்ல பேசினா தான் பிடிக்குது என்கிறார் விவேக்.
Missing comedy legend Vivek ..What a great loss 😢 https://t.co/RO4yPIGszB
— A.R.Rahman (@arrahman) March 13, 2023
அதற்கு, ’நான் ஆங்கிலம் வேணாம்ன்னு சொல்லல, தமிழ் நம்ம உடம்புல இருக்க கண்ணு மாதிரி, ஆங்கிலம் நாம போட்டுக்குற கண்ணாடி மாதிரி. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடாங்குற மாதிரி தமிழுக்கும், தாய்நாட்டுக்கும் பெருமை சேக்குற மாதிரி ஒரு கதை கொண்டுவாங்க. நான் நிச்சயமா நடிச்சு தர்றேன்’ என்கிறார் விஜயகாந்த். ’கேப்டன் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு கதையோட உங்களை வந்து சந்திக்கிறேன்’ என்கிறார் விவேக்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vivek, AR Rahman