திருமணநாளை முன்னிட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருக்கும் படம் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் 'ரோஜா'வில் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே திறமையை நிரூபித்தார். இதையடுத்து 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அதோடு மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
SP Jananathan: தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடம்
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, 1997-ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சைரா பானுவை மணந்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்படி இன்று அவர்களின் 25 வது திருமண நாள். இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, மனைவியுடன் தான் இருக்கும் அழகியப் படத்தை வெளியிட்டு அதில் ’25 + 1’ எனக் குறிப்பிட்டுளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சைரா பானு ஆகியோருக்கு கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் மற்றும் அமீன் ரஹ்மான் ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இசைத்துறையில் வளர்ந்து வருகின்றனர். இதற்கிடையே எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமாகியுள்ள, '99 சாங்ஸ்’ படம் 2021 ஏப்ரல் 16-ஆம் தேதி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்