Home /News /entertainment /

ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனம் 'மூப்பில்லா தமிழ்' - ஆனந்த் மஹிந்திராவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனம் 'மூப்பில்லா தமிழ்' - ஆனந்த் மஹிந்திராவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

ஏ.ஆர்.ரஹ்மான் - ஆனந்த் மஹிந்திரா

ஏ.ஆர்.ரஹ்மான் - ஆனந்த் மஹிந்திரா

மூப்பில்லா தமிழே தாயே பாடலைக் கேட்டு ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டினார்.

    ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக 'மூப்பில்லா தமிழ்' இருக்கிறது என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ராவின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், மூப்பில்லா தமிழே தாயே என்ற இசை ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலுக்கான வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், பூவையார் உள்ளிட்ட பலர் மூப்பில்லா தமிழே தாயே பாடலை பாடியுள்ளனர். கடந்த 24-ம் தேதி துபாயில் நடைப்பெற்ற எக்ஸ்போவில் இப்பாடல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் மஜ்ஜா யூ-ட்யூப் தளத்திலும் இப்பாடல் வெளியானது.

    இதையடுத்து யூ-ட்யூபில் மூப்பில்லா தமிழே தாயே பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கும் விசிட் செய்தார். அப்போது மூப்பில்லா தமிழே தாயே பாடலைக் கேட்டு ரசித்து, ரஹ்மானை பாராட்டினார்.

    இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ’இதில் இடம்பெற்றிருக்கும் பைக் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ’ எனப் பாராட்டியிருந்தார்.

    தனுஷுக்கு ஜோடியாகும் வெளிநாட்டு நடிகை!



    தற்போது ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், “மிக்க மகிழ்ச்சி! காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமன்று, ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக 'மூப்பில்லா தமிழ்' இருக்கிறது என்றும் சொல்கிறோம்! மிக்க நன்றி!” என பதிலளித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman

    அடுத்த செய்தி