முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எம்.எம்.கீரவாணி குறைத்து மதிப்பிடப்பட்டவர் - ஏ.ஆர்.ரஹ்மான்

எம்.எம்.கீரவாணி குறைத்து மதிப்பிடப்பட்டவர் - ஏ.ஆர்.ரஹ்மான்

எம்.எம்.கீரவாணி - ஏ.ஆர்.ரஹ்மான்

எம்.எம்.கீரவாணி - ஏ.ஆர்.ரஹ்மான்

ஆர்ஆர்ஆர் திரைப்பட பாடல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் சமீபத்தில் சிறந்த அசல் பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இதன் மூலம் உலகப் புகழ் பெற்றார். இது குறித்து தற்போது இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பேசுகையில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வெல்லும் என நம்புவதாக தெரிவித்தார்.

“அவர்கள் ஒரு மகத்தான பணியை செய்துள்ளனர். இது ஒரு பெரிய சாதனை. ஒவ்வொரு துறையிலும் இது மீண்டும் மீண்டும் நடக்க வேண்டும். எம்.எம்.கீரவாணி ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட இசையமைப்பாளர். அவர் 35 வருடங்களாக திரைத்துறையில் பணிபுரிந்த நிலையில், அதை விட்டுவிட விரும்பினார். ஆனால் அதன் பிறகு தான் அவரது கெரியர் தொடங்கியது என என் பிள்ளைகளிடம் கூறினேன். ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஆர்ஆர்ஆர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆக்‌ஷன் படமாகும். இதில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முறையே பழங்குடியின தலைவர் கொமரம் பீம் மற்றும் புரட்சியாளர் அல்லூரி சீதா ராம ராஜு ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: AR Rahman, Oscar Awards