முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தாய்லாந்திலிருந்தே 'பத்து தல’ படத்திற்கு டப்பிங் கொடுத்த சிம்பு - இசை வெளியீட்டு விழாவுக்கு வருவாரா?

தாய்லாந்திலிருந்தே 'பத்து தல’ படத்திற்கு டப்பிங் கொடுத்த சிம்பு - இசை வெளியீட்டு விழாவுக்கு வருவாரா?

சிம்பு

சிம்பு

பத்து தல படத்துக்கு தாய்லாந்தில் இருந்து நடிகர் சிம்பு டப்பிங் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படத்திற்கு தன்னுடைய வீட்டின் பாத்ரூமில் டப்பிங் செய்தார் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் சிலம்பரசனை குற்றம் சாட்டிய நிலையில், பத்து தல படத்தின் டப்பிங்கை தாய்லாந்து நாட்டில் இருந்து பேசிக் கொடுத்துள்ளார் சிலம்பரசன். இதற்காக படக்குழுவினர் தாய்லாந்து சென்று திரும்பியுள்ளனர்.

சிலம்பரசன், கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் பத்து தல படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்த மஃப்டி என்ற திரைப்படத்தை தமிழில் பத்து தல என்ற தலைப்பில் படமாக்கியுள்ளனர்.

அதில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒபெலி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.  இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் கௌதம் கார்த்தி,  இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மஃப்டி திரைப்படத்திலிருந்து கதையை மட்டும் எடுத்துக்கொண்டு முழு காட்சிகளையும் மாற்றியிருப்பதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்தார்.  குறிப்பாக 90 சதவீத காட்சிகளை மாற்றியிருப்பதாக கூறினார். பத்து தல திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து வரும் 30-ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டீசரை இன்று பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.

பத்து தல  படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 18ஆம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் நாயகன் சிலம்பரசன் சில காரணங்களால்  தாய்லாந்தில் தங்கியுள்ளார். அவர் வரும் 15 ஆம் தேதி சென்னை திரும்புவார் என்றும், இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

பத்துதல பாடல் படப்பிடிப்பிற்கு சிலம்பரசன் வரவில்லை, டப்பிங்கிற்கு வரவில்லை என்ற தகவல்கள் பரவின. இந்த நிலையில் தான் படக்குழுவினர் இதனை தெரிவித்துள்ளனர்.  அத்துடன் பத்து தல படத்திற்கான டப்பிங் தாய்லாந்திலேயே பேசியுள்ளார்

First published:

Tags: AR Rahman, Simbu