இசைஞானி இளையராஜாவுடனான சிறு வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ் திரையிசை உலகில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும். எப்படி எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என நடிகர்களுக்குள் போட்டி உருவாகி, இரு தரப்பு ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாதது ராஜா - ரஹ்மான் ரசிகர்களின் சண்டை.
தங்கள் விருப்ப நட்சத்திரங்களுக்காக ரசிகர்கள் தான் சண்டையிட்டுக் கொள்கிறார்களே தவிர, நட்சத்திரங்கள் அப்படியில்லை. அவர்கள் எப்போதும் தங்களுக்குள் நல்ல நட்பைக் கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தார் இளையராஜா. அப்போது அந்தப் படத்தை இணையத்தில் பதிவிட்ட ரஹ்மான், எதிர்காலத்தில் தங்கள் ஸ்டூடியோவில் இசைஞானி இசையமைப்பார் என நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என பதிலளித்திருந்தார் இளையராஜா. இப்படி அவர்கள் தங்களுக்குள் நல்ல ரிலேஷன்ஷிப்பைக் கொண்டிருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷுக்கு பாட்டெழுதிய வீடியோவை பகிர்ந்த வைரமுத்து!
View this post on Instagram
இதற்கிடையே சில தினங்கள் முன்பு ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்டுக்கு சென்றார் இளையராஜா. அதே போல் ஏ.ஆர்.ரஹ்மானும் அமெரிக்கா மற்றும் கனடா சென்றிருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் சந்தித்திருக்கிறார்கள். விமான நிலையத்திற்குள் பயணிகளை அழைத்துச் செல்லும் வண்டியில் ஒன்றாக இருவரும் அமர்ந்து வந்த போது எடுத்த சிறு வீடியோவை இஸ்டகிராமில் பதிவிட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ”நாங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்பி வருகிறோம் .. ஆனால் நாங்கள் சென்று சேருமிடம் எப்போதும் தமிழ்நாடு தான். புதாபெஸ்டிலிருந்து இளையராஜா, அமெரிக்கா, கனடாவிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வீடியோ பதிவிட்ட 1 மணிநேரத்துக்குள் 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Rahman, Ilaiyaraja