ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

AR Rahman: 'காணாமல் போன ஆஸ்கர் விருதுகள் மீண்டும் கிடைத்தன' - ஏ.ஆர்.ரஹ்மான் சுவாரஸ்யம்!

AR Rahman: 'காணாமல் போன ஆஸ்கர் விருதுகள் மீண்டும் கிடைத்தன' - ஏ.ஆர்.ரஹ்மான் சுவாரஸ்யம்!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

தனது ஆஸ்கார் விருதை தொலைத்து பின்னர் விரைவாகக் கண்டுபிடித்ததாக நம்புகிறார் ரஹ்மான். சமீபத்தில் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கதையை விவரித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 2009-ல் இரண்டு அகாடமி விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை உருவாக்கினார். இந்தியாவில் மெட்ராஸின் மொஸார்ட் என்று பாராட்டப்பட்ட இவர் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் ஒரிஜினல் ஸ்கோருக்காக ஒரு விருதையும், அதே படத்தில் இடம்பெற்ற 'ஜெய் ஹோ' பாடலுக்காக இன்னொரு விருதையும் பெற்றார்.

சுவாரஸ்யமாக, தனது ஆஸ்கார் விருதை தொலைத்து பின்னர் விரைவாகக் கண்டுபிடித்ததாக நம்புகிறார் ரஹ்மான். சமீபத்தில் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கதையை விவரித்தார்.

இந்த சம்பவத்தை விவரித்த ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருது கிடைத்ததும் தனது தாயார் அந்த விருதுகளை துணியில் சுற்றி, அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்தார் என்றும், விருது கிடைத்ததில் இருந்து அது தங்கத்தால் ஆனது என்றும் அவர் நினைத்துக்கொண்டார் என்றும் தெரிவித்தார். பின்னர் பல ஆண்டுகளாக ரஹ்மான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. சமீபத்தில் அவரது தாயார் கரீமா பேகம் 2020 டிசம்பரில் காலமானார்.

பின்னர் தனது தாயின் வீட்டிலிருந்து ஆஸ்கார் விருதுகளை தனது வீட்டிற்குப் கொண்டு செல்லலாம், என அவற்றை அலமாரியில் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அவ்வளவு தான் விருதுகள் தொலைந்து விட்டன என ரஹ்மான் நினைத்த தருணத்தில், அவரது மகன் ஏ.ஆர்.அமீன் விருதுகள் வேறு அலமாரியில் இருக்கும் விஷயத்தை சொன்னாராம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: A.R.Rahman