முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஷின் அடுத்த படத்தில் பிரபல இசையமைப்பாளர்?

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல இசையமைப்பாளர்?

தனுஷ்

தனுஷ்

ஏ.ஆர்.ரஹ்மானும், தனுஷும் இதற்கு முன் ‘அத்ரங்கி ரே’ படத்தில் இணைந்து பணியாற்றினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷின் ‘வாத்தி’ படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வெங்கி அட்லூரி இயக்கிய இப்படம் பிப்ரவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் தனுஷ். இதற்கிடையே கடந்த ஜனவரி 18-ம் தேதி, தனுஷுடன் புதிய படத்தில் இணைவதாக அறிவித்தனர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள்.

இந்த திரைப்படம் தனுஷின் 50-வது படமாக உருவாகிறது. அதோடு இந்தப் படத்தை தனுஷ் இயக்குவதாக கூறப்படுகிறது. இதில் தனுஷ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிப்பதாகவும், காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாகும் இப்படத்திற்கு 'ராயன்' என்று பெயரிடப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானும், தனுஷும் இதற்கு முன் ‘அத்ரங்கி ரே’ படத்தில் இணைந்து பணியாற்றினர்.

ஆனால், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. ரஹ்மானை பொறுத்தவரை, மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'பத்து தல' படத்திற்கு இசையமைத்துள்ளார். அதோடு ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்டமான படமான 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கும் அவர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: AR Rahman, Dhanush