ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பார்த்திபன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

பார்த்திபன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் | பார்த்திபன்

ஏ.ஆர்.ரஹ்மான் | பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி நடிக்கும் ‘இரவின் நிழல்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

2019-ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த படம் ‘ஒத்த செருப்பு’ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தேசிய விருதையும் பெற்றது. மேலும் படம் முழுக்க பார்த்திபன் என்ற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றிருந்ததால் இந்த புதுமுயற்சியை திரை விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார் பார்த்திபன். இந்தப் படத்திலும் வித்தியாசம் காட்ட முயன்ற பார்த்திபன் ஒரே ஷாட்டில் படம் முழுவதும் படமாக்கப்படும் என்றும் அறிவித்தார். உலக அளவில் பலரும் இம்முயற்சியை மேற்கொண்டிருந்தாலும் ஆசியாவில் முதல்முறையாக பார்த்திபன் கையிலெடுத்துள்ளார்.

இந்நிலையில் இரவின் நிழல் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் இதை உறுதி செய்துள்ளார். அவர் பேசியதை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பார்த்திபன், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது. ஆம் இரவின் நிழல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றுகிறார். அருமையில் - 3 பாடல்கள் கைவசம் அருகாமையில் இன்னொன்று ப்ரமோஷன் பாடல். மிகவும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ஒத்த செருப்பு திரைப்படத்தில் பணிபுரிந்த ஆஸ்கர் விருது நாயகன் ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிக்கோர்ப்புக்காக தேசிய விருது பெற்றார். மேலும் சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் இத்திரைப்படம் வென்றது. இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் மற்றுமொரு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்திருக்கிறார் பார்த்திபன்.

First published:

Tags: A.R.Rahman, Actor Parthiban, Kollywood