Home /News /entertainment /

29 வருடங்களுக்குப் பின் மலையாளத்தில் இசையமைத்திருக்கும் ரஹ்மான்

29 வருடங்களுக்குப் பின் மலையாளத்தில் இசையமைத்திருக்கும் ரஹ்மான்

காட்சி படம்

காட்சி படம்

AR Rahman :பகத் பாசிலின் மலையன் குஞ்சு படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது.

பகத் பாசில் நடிப்பில் தயாராகியிருக்கும் மலையன் குஞ்சு படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையமைத்திருக்கிறார்.
ரஹ்மானின் தந்தை மலையாளத்தில் இசையமைத்திருக்கிறார். தமிழைவிட மலையாளத்தில் அவர் அறியப்படுகிற இசைக்கலைஞர். அவரது தந்தையிடமிருந்து தொடங்குகிறது மலையாள சினிமாவுடனான ரஹ்மானின் நெருக்கம். அவரது முதல் படம் ரோஜா 1992 ஆகஸ்டில் வெளியான அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 1992 இல் அவர் இசையமைத்த மலையாளப் படம் யோதா வெளியானது.

மோகன்லால், மதுபாலா யோதாவில் நடித்திருந்தனர். முதல் படம் வெளியான அடுத்த மாதமே ரஹ்மானின் மலையாளப் படம் வெளியானது. அதன் பிறகு அவர் மலையாளப் படம் எதற்கும் இசையமைக்கவில்லை.



29 வருடங்கள் கடந்த நிலையில் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், பகத் பாசிலின் மலையன் குஞ்சு படத்துக்கு அவர் இசையமைப்பதாக தகவல் வெளியானது.  மலையன் குஞ்சு படத்தை அறிமுக இயக்குனர் சஜிமோன் இயக்கியுள்ளார்.

also read : நடிகை சாக்‌ஷி அகர்வாலின் மாடர்ன் படங்கள்..

படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதுடன் ஒளிப்பதிவையும் செய்திருப்பவர் மகேஷ் நாராயணன். அடிப்படையில் இவர் ஒரு எடிட்டர். பகத் பாசில் நடித்த டேக் ஆஃப், சீ யூ சூன், மாலிக் படங்களை இயக்கியவர். நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவித்த நிலையில் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பகத் பாசிலின் தந்தையும், இயக்குனருமான பாசில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார் வித்தியாசமான கதைக்களத்தில் மலையன் குஞ்சு தயாராகியுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: AR Rahman

அடுத்த செய்தி