சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை - ரஹ்மான் பாடலுக்கு சிலிர்க்கும் பார்த்திபன்!
சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை - ரஹ்மான் பாடலுக்கு சிலிர்க்கும் பார்த்திபன்!
பார்த்திபன்
இரண்டாயிரத்தில் பார்த்திபன் எடுப்பதாக இருந்த ஏலேலோ படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் படமே கைவிடப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி சாத்தியமாகியிருக்கிறது.
முதல்முறையாக பார்த்திபன் படத்துக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அதில் ஒரு பாடலை சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை என்று சிலிர்ப்புடன் பாராட்டியுள்ளார் பார்த்திபன்.
படத்துக்குப் படம் வித்தியாசமான முயற்சிகளைச் செய்வது பார்த்திபன் வழக்கம். கடைசியாக அவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம்கூட ஒரேயொரு நபர் நடித்த வித்தியாசமான படம்தான். பாராட்டுக்களையும், சில விருதுகளையும் படம் வென்றது. ஒத்த செருப்பு தந்த உற்சாகத்தில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் திரைப்படம்.
இந்தப் படத்துக்காக ரஹ்மான் ஒரு டியூனை கம்போஸ் செய்ய, அதற்கு வரிகள் எழுதியுள்ளார் பார்த்திபன். ரஹ்மான் இசைக்கு அவர் வரிகள் எழுதும் முதல் பாடல். அது குறித்து உணர்ச்சிகரமான பதிவை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
"'இரவின் நிழல்’-ஏ ஆர் ரஹ்மான் இசை ம்யூரல்!
பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது. சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில். சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு (திரைக்கு) வரும்போது ருசிக்கும்."
இரண்டாயிரத்தில் பார்த்திபன் எடுப்பதாக இருந்த ஏலேலோ படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் படமே கைவிடப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி சாத்தியமாகியிருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.