ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமல் படத்தில் பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை

கமல் படத்தில் பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை

கமல் படத்தில் பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை

கமல் படத்தில் பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை

தேவராஜன் மாஸ்டர் இசையமைத்து பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான இன்னொரு படம் அன்னை வேளாங்கண்ணி. இதிலும் ஆர்.கே.சேகர் பணிபுரிந்திருந்தார். இசையமைப்பாளர்களின் பெயருடன் உதவி என்று இவரது பெயர் இடம்பெறும் போதே, அந்தப் படங்களில் ஆர்.கே.சேகரின் பங்களிப்பு எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :

காலம் உருட்டும் தாயங்களில் சிலநேரம் திறமைசாலிகளின்; பக்கம் கடைசிவரை விழாமலே போகும். திறமைக்கேற்ற புகழும், பிரபலமும் பெறாமல் மறைந்து போனவர் இசையமைப்பாளர் ஆர்.கே.சேகர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை என்றால் கூடுதலாக பலருக்கும் தெரியும்.

ராஜகோபால குலசேகரனின் சுருக்கம்தான் ஆர்.கே.சேகர். 1933 ஆம் ஆண்டு, ஜுன் 21 ஆம் நாள் திருவள்ளூரில் பிறந்தார். ஆரம்பத்தில் நாடகங்களில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் மலையாள சினிமாவில் நுழைந்தார். பலருக்கும் உதவியாளராக இருந்துவிட்டு 1964 இல் வெளிவந்த பழஸிராஜா படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக அதில் இடம்பெற்ற சொட்ட முதல் சொடலைவர.. பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. மலையாள கிளாஸிக் பாடல்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

முதலிரு படங்களுக்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து 1971 இல் மீண்டும் படங்களுக்கு ஆர்.கே.சேகர் இசையமைத்தார். அனாதசில்பங்கள், டாக்சி கார் போன்ற படங்களில் அவரது இசையும், பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், தொடர்ச்சியாக அவர் இசையமைத்த படங்கள் தோல்வியடைய, அவரது நல்ல பாடல்களும் கவனிக்கப்படாமல் போயின. இதன் காரணமாக எம்.பி.ஸ்ரீனிவாசன், வி.தக்ஷிணாமூர்த்தி உள்பட பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். அதில் முக்கியமானவர் இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன். இவர் ஆர்.கே.சேகரின் நெருங்கிய நண்பர். அவரது முதல் படம் தொடங்கி தனது இறப்புவரை அனைத்துப் படங்களிலும் பணிபுரிந்தார்.

அவர் பணிபுரிந்த இன்னொரு முக்கியமான இசையமைப்பாளர் தேவராஜன் மாஸ்டர். இவர் உருவாக்கிய பாடல்கள் மலையாள சினிமாவின் மறக்க முடியாத அத்தியாயங்கள். இவர் 300 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் 20 க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களும் அடக்கம். ஜெயகாந்தனின் கதையை தழுவி எடுத்த சிவாஜியின் காவல் தெய்வம் (1969) படத்துக்கு தேவராஜன் மாஸ்டர்தான் இசை. அதில் அவரது உதவியாளராக ஆர்.கே.சேகர் பணிபுரிந்தார்.

Also read... மதுரையின் வெள்ளிவிழா நாயகன் என்று சிவாஜியை ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

படத்தின் டைட்டிலிலும் அவரது பெயர் இசையமைப்பாளருடன் சேர்ந்து வரும். கமல் நடித்த பருவ காலம் திரைப்படம் 1974 இல் வெளியானது. இதில் கமல், ரோஜா ரமணியை பாலியல் பலாத்காரம் செய்கிறவராக வருவார். இந்தப் படத்திலும் இசையமைப்பாளர் தேவராஜன் மாஸ்டருடன் இணைந்து ஆர்.கே.சேகரின் பெயரும் இடம்பெறும்.

தேவராஜன் மாஸ்டர் இசையமைத்து பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான இன்னொரு படம் அன்னை வேளாங்கண்ணி. இதிலும் ஆர்.கே.சேகர் பணிபுரிந்திருந்தார். இசையமைப்பாளர்களின் பெயருடன் உதவி என்று இவரது பெயர் இடம்பெறும் போதே, அந்தப் படங்களில் ஆர்.கே.சேகரின் பங்களிப்பு எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆர்.கே.சேகர் 1976 செப்டம்பர் 30 ஆம் தேதி மரணமடைந்தார். 43 வது வயதில் அவரது மரணம் நிகழ்ந்தது இசையுலகுக்கு பேரிழப்பு. அவர் மறைந்த போது சோட்டானிக்கரா அம்மா என்ற படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். அவர்தான் அப்படத்தின் இசையமைப்பாளர். படவேலைகள் முடியும் முன்பே அவரது மரணம் சம்பவித்தது.

தேவராஜன் மாஸ்டர், ஜான்சன் மாஸ்டர் போல் புகழ் பெற வேண்டியவர் ஆர்.கே.சேகர். அபூர்வமான பாடல்களை உருவாக்கியவர். காலத்தின் தாயத்தில் அவரது பக்கம் விழாமலே போனது துரதிர்ஷ்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: AR Rahman, Entertainment, Kamal Haasan