ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘99’ சாங்ஸ் இசை வெளியீட்டு விழாவில் இந்தியை புறக்கணித்தது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

‘99’ சாங்ஸ் இசை வெளியீட்டு விழாவில் இந்தியை புறக்கணித்தது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

‘99 சாங்ஸ்’ இசை வெளியீட்டின் போது தொகுப்பாளர் இந்தியில் பேசும்போது மேடையை விட்டு தான் இறங்கிச் சென்றது ஏன் என்பது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள, ‘99 சாங்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பாடர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர்.

‘99 சாங்ஸ்’ இசை வெளியீட்டின்போது இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தமிழில் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென இந்தியில் பேசினார். உடனே இந்தி? எனக் கேட்டவாறு மேடையை விட்டு கீழிறங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த செய்தி விவாதப் பொருளானது.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் தான் அப்படி நடந்து கொண்டது ஏன் என்று தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகிறது. இந்தி பட விழாவில் பாடலாசிரியர் ஆங்கிலத்தில் பேசினர். அப்போது இந்தியில் பேச சொன்னேன். அதேபோல் தான் தமிழ் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் பேச வேண்டும் என்றேன். படக்குழுவுக்கு தமிழ் தெரியாது இந்தியில் பேச வேண்டும் என்று தொகுப்பாளர் நினைத்துக் கொண்டார்.

ஆனால் இந்திக்காரர்களை அழைத்து வந்துவிட்டதால் இந்தியில் பேசுகிறார்கள் என்று யாரும் தப்பாக நினைத்துவிடக்கூடாது. அந்த சம்பவத்தின் மூலம் தொகுப்பாளர்  படத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் தேடித்தந்துவிட்டார். அதற்காக அவருக்கு போனில் நன்றி தெரிவித்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அனைத்து மொழிகளும் உயர்ந்தது தான். நமது தாய் மொழி தமிழ் தான். அதை யாராலும் மாற்ற முடியாது.” என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்

First published:

Tags: A.R.Rahman, Kollywood