Home /News /entertainment /

AR Rahman: 6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

AR Rahman: 6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை, அதுவும் 2 விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலை நிமிரச் செய்தார் ரஹ்மான்.

    சென்னையில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று, 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

    மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டுச் சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தனது துள்ளல் இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர். அமைதியான சுபாவம் கொண்ட ரஹ்மான், தனது இசையால் மற்றவர்களை பேச வைத்தவர்.

    1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்தார். சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை, அதுவும் 2 விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலை நிமிரச் செய்தார்.

    நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

    இந்நிலையில் ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28-ம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தருவதாக அறிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆடைகளை வாங்க இயலாதவர்களுக்கு கொடுத்து உதவும் திட்டத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதை, பிரமோத் சுரடியா என்பவர் ஏலம் மூலம் வாங்கினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman

    அடுத்த செய்தி