Home /News /entertainment /

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய குறும்படம் வெளியீடு…

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய குறும்படம் வெளியீடு…

லீ மஸ்க் படத்தின் போஸ்டர்.

லீ மஸ்க் படத்தின் போஸ்டர்.

கடந்த ஆண்டு வெளியான 99 சாங்ஸ் திரைப்படத்தை தயாரித்ததுடன், அதற்கு கதையும் ரகுமான் எழுதியுருந்தார்.

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏ.ஆர். ரகுமான் இயக்கியுள்ள லீ மஸ்க் என்ற குறும்படம் வெளியிடப்படவுள்ளது.

இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவைப் போன்று, காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்த பெருமை ஏ.ஆர். ரகுமானுக்கும் உள்ளது.

2-3 புத்தகங்கள் எழுதும் அளவுக்கு 2 ஆஸ்கர் உள்பட அவர் பெற்ற விருதுகள் உள்ளன. இந்நிலையில் இயக்குனர் என்ற புதிய அவதாரத்தை ஏ.ஆர்.ரகுமான் எடுத்துள்ளார்.

அவரது இயக்கத்தில் லீ மஸ்க் என்ற 36 நிமிடங்கள் ஓடும் குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கி தயாரித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

இதையும் படிங்க - கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘இரவின் நிழல்’

லீ மஸ்க் படத்திற்கான கதையை ரகுமானுடன் அவரது மனைவி சாய்ரா ரகுமானும் இணைந்து எழுதியுள்ளனர். ஆங்கில மொழியில் இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இசையும் ரகுமான்தான் அமைத்துள்ளார்.

இந்நிலையில் பிரான்சிஸ் கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட திருவிழாவில், லீ மஸ்க் குறும்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு அத்கான் சத்கான் என்ற இந்தி படத்தை தயாரித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். கடந்த ஆண்டு வெளியான 99 சாங்ஸ் திரைப்படத்தை தயாரித்ததுடன், அதற்கு கதையும் ரகுமான் எழுதியிருந்தார்.

இதையும் படிங்க.. இயக்குனராக ஒரே வருடத்தில் நான்கு ஹிட் கொடுத்த பாக்யராஜ்

தற்போது அடுத்த கட்டமாக லீ மஸ்க் குறும்படத்திற்கு கதை, தயாரிப்பு, இயக்கம், இசை என 4 முக்கிய வேலைகளையும் ரகுமான் முடித்துள்ளார். முழு நீள படத்தை இயக்குவதற்கு முன்னோட்டமாக, குறும்படத்தை இயக்கி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, இரவின் நிழல் படங்களின் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. அடுத்தாக பொன்னியின் செல்வன் பட பாடல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: AR Rahman

அடுத்த செய்தி