முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

ரியாஸ்தீன் - கதீஜா

ரியாஸ்தீன் - கதீஜா

ஆடியோ இன்ஜினியரான ரியாஸ்தீன், பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானுக்கும், ஆடியோ இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி திரையுலகிலும் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு கதீஜா, ரஹிமா என இரு மகள்களும் அமீன் என்ற மகனும் இருக்கிறார். அப்பாவைப் போலவே இவரது மூன்று பிள்ளைகளும் இசைத்துறையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி கதீஜாவின் பிறந்த நாளன்று ஆடியோ இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் முகமது என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றிருக்கிறது. இதனை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்த கதீஜா, “எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதத்துடன், தொழில்முனைவோரும் விஸ்கிட் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் முகமதுடன் நடந்த எனது நிச்சயதார்த்தத்தை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பிறந்தநாளான டிசம்பர் 29-ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நிச்சயதார்த்த விழாவில், கதீஜா ரஹ்மான் பிங்க் மற்றும் வெள்ளி நிற ஆடைகளுடன் நகைகள் மற்றும் மாலை அணிந்திருந்தார். டிசம்பர் 29-ம் தேதி நடந்த நிச்சயதார்த்தத்தில் உடைக்கு பொருத்தமான மாஸ்க்கை அணிந்திருந்தார். விழாவில் எடுக்கப்பட்ட ரியாஸ்தீனின் படத்தை வெளியிடுவதற்குப் பதிலாக, தனது வருங்கால கணவரின் கருப்பு - வெள்ளை புகைப்படத்தைச் சேர்த்து வெளியிட்டிருக்கிறார் கதீஜா.




 




View this post on Instagram





 

A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman)



ஆடியோ இன்ஜினியரான ரியாஸ்தீன், பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லைவ் சவுண்ட் இன்ஜினியராகவும் பணியாற்றி வருகிறார். ஆக தன்னுடன் வேலைப்பார்த்த ரியாஸ்தீனையே தனக்கு மருமகனாக்கி இருக்கிறார் ரஹ்மான்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: AR Rahman, Tamil Cinema