இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் மகளின் கதிஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் 1995-ல் சாய்ரா பானுவை திருமணம் முடித்தார். இந்த தம்பதியினருக்கு கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் மூத்த மகள் கதிஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
View this post on Instagram
மணமகன் ரியாசுதீன் ஷேக் முகமது, ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்ஜினியராக பணியாற்றியவர்.
View this post on Instagram
தனது திருமணம் குறித்து கதிஜா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'என் வாழ்வில் மிகவும் காத்திருந்த நாள் வந்து விட்டது. எனக்கான ரியாசுதீனை திருமணம் முடித்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க - சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' முதல் பாடல் வெளியீடு அறிவிப்பு...
ஏ.ஆர். ரகுமான் தனது சமூக வலைதள பக்கங்களில், 'எல்லாம் வல்ல இறைவன் மணமக்களை ஆசிர்வதிக்கட்டும். உங்கள் வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் நன்றியை முன்னரே தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
May the Almighty bless the couple .. thanking you in advance for your good wishes and love🌹🌹💍🌻🌻 @RahmanKhatija #RiyasdeenRiyan #nikkahceremony #marriage pic.twitter.com/S89hM4IwCT
— A.R.Rahman (@arrahman) May 5, 2022
மணமக்களான கதிஜா - ரியாசுதீனுக்கு பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க -
ஏ.ஆர். ரகுமான் பதிவிட்ட புகைப்படத்தில் அவரது தாயார் கரீமா பேகத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 டிசம்பர் மாதத்தின்போது, உடல் நல குறைவு காரணமாக ஏ.ஆர். ரகுமானின் தாயார் காலமானார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Rahman