ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கையில் வாளுடன் உதயநிதி… மாமன்னன் படக் காட்சிகளை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்…

கையில் வாளுடன் உதயநிதி… மாமன்னன் படக் காட்சிகளை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்…

உதயநிதி - ஏ.ஆர். ரகுமான்

உதயநிதி - ஏ.ஆர். ரகுமான்

மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். வடிவேலு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மாமன்னனை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வெளியிடுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, மாமன்னன் படக் காட்சிகளை சிலவற்றை படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.

நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்து வரும் உதயநிதி இன்று தனது 47ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உதயநிதியை வாழ்த்தி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

‘பிரபாஸை திருமணம் செய்து கொள்ளத் தயார்…’ – விருப்பம் தெரிவித்த பிரபல இந்தி நடிகை

ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், உதயநிதியின் அடுத்த படமான மாமன்னன் படத்திலிருந்து சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் தூண்டியுள்ளன.

மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். வடிவேலு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மாமன்னனை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வெளியிடுகிறார்.

ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் அழுத்தமான கதைகள் கொண்டதாக அமைந்தன. அந்த வகையில் மாமன்னன் படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்.வினோத்துடன் இணையப் போகிறாரா தனுஷ்? புதிய தகவலால் பரபரப்பு

இன்று பிறந்த நாள் கொண்டாடும் உதயநிதியை வாழ்த்தி கமல், விஷால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். தற்போது உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்துள்ள கலகத் தலைவன் படம் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: AR Rahman, Udhayanidhi Stalin