தென்இந்தியர் என்பதால் பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்புகளைத் தடுக்கின்றனர் - சகோதரி ஏ.ஆர்.ரெஹானா குற்றச்சாட்டு

ஒரு தென்னிந்தியர் வட இந்திய சினிமாவில் ஆளுமை செலுத்துவதை விரும்பாத கும்பல் ரஹ்மானின் பட வாய்ப்புகளை கெடுப்பதாக அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹானா தெரிவித்துள்ளார்.

தென்இந்தியர் என்பதால் பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்புகளைத் தடுக்கின்றனர் - சகோதரி ஏ.ஆர்.ரெஹானா குற்றச்சாட்டு
ஏ.ஆர்.ரகுமான்
  • Share this:
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறியுள்ள்ளார்- சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என கூறியதாகவும், சிலர் அவரை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படித்தான் தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருப்பதாகவும் ரஹ்மான் கூறியுள்ளார். 28 ஆண்டுகளாக திரை இசையில் கோலோச்சி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளார். குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் அவர் பணியாற்றிய இந்தி படங்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகும்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதற்கு இந்தி திரையுலகில் அவர் புறக்கணிக்கப்பட்டதே காரணம் என்ற கருத்து நிலவி வரும் சூழலில் ரஹ்மானும் இதேபோன்ற புறக்கணிப்புகளுக்கு ஆளாகியுள்ளார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் என்பதை விட ஒரு தென்னிந்தியர் வட இந்திய சினிமாவில் ஆளுமை செலுத்துவதை விரும்பாத கும்பல் ரஹ்மானின் பட வாய்ப்புகளை கெடுப்பதாக அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹானா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல, யேசுதாஸ், வாணி ஜெயராம் போன்ற தென்னிந்திய கலைஞர்களையும் வட இந்தியா புறக்கணித்ததாக இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா கூறியுள்ளார்.ஒருவர் குறித்து புரளியை பரப்பி அவருக்கான வாய்ப்பை கெடுக்கும் மோசமான செயல்தான் இந்தி சினிமாவின் மிகப்பெரிய பிரச்னை என்றும், ஏ.ஆர்.ரஹ்மானும் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading