முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆஸ்கர் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பாலசந்தர் அறிமுகங்கள்? - சுவாரசியத் தகவல்!

ஆஸ்கர் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பாலசந்தர் அறிமுகங்கள்? - சுவாரசியத் தகவல்!

ஏ.ஆர்.ரஹ்மான் - எம்.எம்.கீரவாணி

ஏ.ஆர்.ரஹ்மான் - எம்.எம்.கீரவாணி

பாலசந்தர் அறிமுகப்படுத்திய இரண்டு பேரும் ஆஸ்கர் விருது வென்றுள்ளதாக அவரது ரசிகர்கள் பெருமையுடன் பகிர்ந்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

90வது அகாடமி விருதுகள் விழாவில் இந்தியா 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. அதில் சிறந்த ஒரிஜினில் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. இந்த விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிப்பதாக எம்.எம்.கீரவாணி நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். கீரவாணி தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழகன், வானமே எல்லை போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தெலுங்கில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும் தமிழில் பாலசந்தரால்தான் கீரவாணி அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானையும் தனது கவிதாலயா சார்பாக தயாரித்த மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலசந்தர் அறிமுகப்படுத்திய இரண்டு பேரும் ஆஸ்கர் விருது வென்றுள்ளதாக அவரது ரசிகர்கள் பெருமையுடன் பகிர்ந்துவருகின்றனர்.

இளையராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரே நேரத்தில் கவிதாலாயா மூலம் தயாரித்து அவர் இயக்கிய வானமே எல்லை படத்துக்கு இசையமைப்பாளராக கீரவாணியையும், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானையும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்துக்கு இசையமைப்பாளராக தேவாவையும் பாலசந்தர் ஒப்பந்தம் செய்திருந்தார் என்ற ஒரு தகவல் கூறப்படுகிறது.

First published:

Tags: AR Rahman, Oscar Awards