AR Rahman: '99 சாங்ஸ்’ ஹாலிவுட் படம் போலிருக்கிறது என்றார் ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான்

AR Rahman: '99 சாங்ஸ்’ ஹாலிவுட் படம் போலிருக்கிறது என்றார் ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்திருக்கும் படம் 99 சாங்ஸ். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ஏப்ரல் 16 படம் வெளியாகிறது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துக் கொண்ட விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

  • Share this:
    ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்திருக்கும் படம் 99 சாங்ஸ். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ஏப்ரல் 16 படம் வெளியாகிறது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துக் கொண்ட விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

    99 சாங்ஸ் மைக்கரு என்ன?

    பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ் படத்தின் மையக்கருவாகும். இந்த போராட்டத்தின் மாற்று மருந்தாக இசை அமைகிறது.

    இந்தக் கதையை எழுத வேண்டும் என்று ஏன் தோன்றியது. அதன் மையப்புள்ளி என்ன?

    2010 டிசம்பரில் விமானத்தில் வந்தபோது தேவதை கதை போல் ஒன்று தோன்றியது. ஒரு பையன், ஒரு பெண்ணை அடைவதற்கு 100 பாட்டுக்கள் எழுதினால் எப்படியிருக்கும்? இதிலிருந்து உருவானதுதான் 99 சாங்ஸ் படத்தின் கதை.

    உங்கள் கதையை முன்னணி இயக்குநரை வைத்து படமாக்கியிருக்கலாமே?

    எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகச்சிறந்த படங்களை எடுத்தவர்கள். இந்தப் படம் சின்ன முயற்சி. இது புது வாய்ஸ். அதாவது, இந்தப் படம் நெட்பிளிக்ஸ் பார்க்கும், யூடியூப் பார்க்கும் தலைமுறைக்கானது.

    99 சாங்ஸ் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி பற்றி....?

    10 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அது பிடித்திருந்தது. அதை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். நிறைய விளம்பரப்படம் எடுத்திருக்கிறார். இசை, சண்டை, விளையாட்டு நுணுக்கங்கள் அறிந்தவர். பல திறமைகள் கொண்டவர் என்பதால் அவரை இயக்குநராக்கினோம்.

    புதுமுக நடிகர்களை பயன்படுத்தியது ஏன்?

    இந்தப் படத்தின் நாயகன், நாயகி இருவரும் புதுமுகங்கள். புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால் கால்ஷீட் பிரச்சனை இருக்காது. இவர்கள் இருவரும் ஒரு வருடம் இசைப்பயிற்சி பெற்றனர். பிறகு அமெரிக்கா சென்று நடிப்புப் பயிற்சி பெற்றனர். புதுமுக நடிகர்களால் மட்டுமே இது சாத்தியமானது.

    உங்கள் இயக்குநர் நண்பர்கள் படத்தைப் பார்த்தார்களா?

    நிறைய பேரிடம் காட்டவில்லை. ஷங்கர் பார்த்துவிட்டு ஹாலிவுட் படம் போல் இருக்கிறது என்றார். கலை மற்றும் கமர்ஷியலின் கலவை என்றார் அட்லி. இது மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    தொடர்ந்து கதை எழுதுவீர்களா?

    நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். தமிழ்ப் படத்துக்கும் கதைகள் இருக்கிறது. ஆனால், ஒன்றை செய்தால் அது ஒழுங்காக இருக்க வேண்டும். இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் அடுத்தக்கட்டத்தைப் பற்றி யோசிப்பதாக இருக்கிறேன்.

    படம் இயக்குவீர்களா?

    இயக்குநராக பல காலம் ஆகும். நிறைய விஷயங்களை மனதில் வைத்து படம் இயக்குவதற்கான நேரம் எனக்கு இல்லை. ஆனால், ஒரு குழுவை வைத்து படம் தயாரித்து, ஒரு இயக்குநரை வைத்து படம் எடுக்க எனக்கு எளிதாக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: