விஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்? காரணம் என்ன..?

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் விஜய்

ஏ.ஆர்.முருகதாஸிடம் முழுக் கதையைக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முழு திருப்தியடையவில்லை என்று கூறப்படுகிறது.

  • Share this:
விஜயின் 65-வது திரைப்படத்திலிருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘மாஸ்டர்’ ரிலீசுக்குப் பின் விஜய்யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருந்தது. அந்தப் படத்தை துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி விஜய்க்கு ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்தார். கொரோனா லாக்டவுனில் ‘தளபதி 65’ படத்துக்கான கதையை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யிடம் கூறினார்.

விஜய்க்கு கதை பிடித்துப் போகவே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸிடம் முழுக் கதையைக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முழு திருப்தியடையவில்லை என்றும் இதனால் சில மாற்றங்கள் செய்யச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது விலகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: பிரபல சீரியல் நடிகைக்கு காதலருடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் - சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து

மாஸ்டர் படத்தை அடுத்து தனது அடுத்த படத்துக்கு கதை கேட்டு வந்த நடிகர் விஜய், மாஸ்டர் ரிலீசுக்குப் பின்னர் புதிய படத்துக்கான கதையை முடிவு செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. தீபாவளிக்குப் பின்பு தன்னிடம் ஏற்கெனவே கதை சொல்லிய இயக்குநர்களை அழைத்துப் பேச விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: