Home /News /entertainment /

சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?

சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?

சிம்பு - ஏ.ஆர்.முருகதாஸ்

சிம்பு - ஏ.ஆர்.முருகதாஸ்

சிம்புவின் 'கொரோனா குமார்' திரைப்படம் 2021-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லாததால், படத்தை இயக்குனர் கோகுல் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    நடிகர் சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    விஜய்யின் 66-வது படத்தை இயக்கவிருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தனது அடுத்தப் படத்தை இன்னும் அறிவிக்காததால், கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் ஏதும் இயக்காமல் இருக்கிறார். இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிம்புவுக்கு பல மொழிகளில் இயக்க ஏதுவான கதை ஒன்றை கூறியதாக கூறப்படுகிறது. அந்த கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்துள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இதற்கிடையே, சிம்புவின் 'கொரோனா குமார்' திரைப்படம் 2021-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லாததால், படத்தை இயக்குனர் கோகுல் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    சமீபத்தில் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கினார் சிம்பு. அதோடு கன்னட படமான 'மஃப்தி'யின் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் தற்போதைய ஷெட்யூல் ஒரு மாதம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், சிலம்பரசன் கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: A.R.murugadoss, Simbu

    அடுத்த செய்தி