இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனையடுத்து திரிஷா நடிப்பில் ராங்கி என்ற படத்துக்கு கதை எழுதியிருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியானது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை இயக்குநர் முருகதாஸ் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தமிழின தலைவராக இருந்தபோதிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியவர் என்பது தமிழகத்தில் பிறந்த அனைவருக்கும் தெரியும். நாம் அறிந்திருந்த அந்த விஷயத்தை இந்த புகைப்படக் கண்காட்சியில் வந்து பார்க்கும்போது அவரோடு பயணித்த உணர்வை இந்தக் கண்காட்சி அளிக்கிறது. அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டாகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் இந்த வரலாற்றுப் பதிவை பார்த்து மகிழும்படி நான் வேண்டுகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை இறந்த பிறகு எழுதிய கடிதத்தில் ஒவ்வொருமுறையும் உங்களை தலைவரே என்று அழைத்த நான் கடைசியாக ஒருமுறை அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா என்ற அந்த வரிகளை படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது.
சிறிய வயதிலேயே இளைஞரணிக்கு பொறுப்பேற்றிருக்கிறார். ஒரு தலைவரின் மகனாக இருந்தாலும் தனக்கென ஒரு போராட்டத்தை அமைத்து வெற்றிகண்டு மிகப்பெரிய இடத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த வரலாற்று பதிவுகளை பயோபிக்காக இந்திய அளவில் எடுக்க முடியும். அந்த அளவுக்கு பிரம்மாண்டங்களும் மனதை பாதிக்கும் சம்பவங்களும் இருக்கின்றன. மிசா காலகட்டத்தில் அவர் அனுபவித்த போராட்டங்கள் துன்பங்களை பார்க்கும்போது ஒரு பயோபிக் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Murugadoss, CM MK Stalin