முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படம் அறிவிப்பு… மிரட்டலான தோற்றத்தில் கவுதம் கார்த்திக்

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படம் அறிவிப்பு… மிரட்டலான தோற்றத்தில் கவுதம் கார்த்திக்

ஏ.ஆர் .முருகதாஸ் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஏ.ஆர் .முருகதாஸ் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கவுதம் கார்த்திக் தற்போது சிம்பு ஹீரோவாக நடிக்கும் பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ளார்.

  • Last Updated :

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர். முருகதாஸின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.

1947 ஆகஸ்ட் 16 என்று இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளார்கள். இந்த படத்தை என்.எஸ். பொன்குமார் இயக்குகிறார். கவுதம் கார்த்திக் உடன் விஜய் டிவி புகழ் படத்தில் இடம்பெற்றுள்ளார்.

முருகதாஸிடன் நீண்ட காலம் உதவி இயக்குனராக என்.எஸ். பொன் குமார் பணியாற்றியுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள 1947 ஆகஸ்ட் 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் மிரட்டலான தோற்றத்தில் கவுதம் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்து இந்த படம் ஒரு பீரியட் மூவி என்பதை புரிந்து கொள்ளலாம்.

1947 ஆகஸ்ட் 16 படத்தை ஏ.ஆர். முருகதாஸ், பர்ப்பிள் புல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தியில் கஜினி ரீமேக்கில் அமீர் கானையும், துப்பாக்கி ரீமேக்கில் அக்சய் குமாரையும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

அடுத்ததாக அவர் இந்தி படம் ஒன்றை இயக்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கவுதம் கார்த்திக் தற்போது சிம்பு ஹீரோவாக நடிக்கும் பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படிங்க.. அந்த வார்த்தை சொன்ன தாமரை.. கடுப்பானாரா ஆங்கர் பிரியங்கா? கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!

கதைகளை நுட்பமாக தேர்வு செய்து படங்களை தயாரிப்பதில் ஏ.ஆர். முருகதாஸ் நிபுணர் என்பதால் 1947 ஆகஸ்ட் 16- திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    முருகதாஸின் புதிய படம் அறிவிப்புக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: AR Murugadoss, Goutham karthik