ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

AR Murugadoss : கன்னட நடிகரை குறி வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..

AR Murugadoss : கன்னட நடிகரை குறி வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

AR Murugadoss : பிரம்மாண்ட விலங்கை கிராபிக்ஸில் உருவாக்கும் ஏ.ஆர். முருகதாஸ்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  முருகதாஸ் தனது அடுத்தப் படத்தில் நாயகனுக்குப் பதில் ஸிஜி எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸை நம்பி களம் இறங்குகிறார். நான் படத்தில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட நாயகனாக கலக்கியது அல்லவா. அதேபோல்தான். ஆனால், ஈக்குப் பதில் கிங்காங் போன்ற பிரமாண்ட விலங்கை முருகதாஸ் கிராபிக்ஸில் உருவாக்குவதாக கூறப்படுகிறது.

  நான் படத்தில் அப்போது வளர்ந்து வந்த நானியை ராஜமௌலி நாயகனாக்கினார். இதுபோன்ற படங்களில் மாஸ் முன்னணி நடிகர்களை நடிக்க வைப்பது கஷ்டம். ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழ், தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் 'நோ' சொல்வார்கள் என்பதை உணர்ந்து தனது பார்வையை கன்னட சினிமா பக்கம் நகர்த்தியிருக்கிறார் முருகதாஸ்.

  also read :  ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையில் ரெஜினாவின் புகைப்படங்கள்

  கேஜிஎஃப் - சேப்டர் 1 இல் நடித்த யாஷ் முருகதாஸின் முதல் சாய்ஸ். கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியா அறிந்த நடிகராகியிருக்கிறார் யாஷ். விரைவில் இந்தப் படத்தின் சேப்டர் 2 வெளியாக உள்ளது. அது அவரது இமேஜை மேலும் அதிகரிக்கும். அவர் படத்தில் நடித்தால், இந்திய அளவில் படத்தை கொண்டு சேர்க்கலாம் என முருகதாஸ் கணக்குப் போடுகிறார்.

  இந்தப் படத்தைப் பொறுத்தவரை கிராபிக்ஸ்தான் முக்கியம். அதற்கான பணிகளில் தற்போது அவர் தீவிரமாக உள்ளார். ஸிஜி வேலைகளுக்காக உலகின் முன்னணி நிறுவனமான பிரைம் போகஸுடன் முருகதாஸ் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக தீபாவளியை முன்னிட்டு முருகதாஸின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: AR Murugadoss