ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

AR Murugadoss: சரத்குமாருடன் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம்!

AR Murugadoss: சரத்குமாருடன் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம்!

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

2011-ல் ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, தமிழில் முருகதாஸுடன் இணைந்து தமிழ் படங்களை தயாரிக்க ஆரம்பித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் கடைசிப் படம் தர்பார். ரஜினி நடித்த இந்தப் படம் வசூல்ரீதியாக லாபத்தை தந்தாலும் ரசிகர்களிடம் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்த தவறியது. அடுத்து முருகதாஸ், யார் நடிக்கும் படத்தை இயக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, அவர் தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2011-ல் ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, தமிழில் முருகதாஸுடன் இணைந்து தமிழ் படங்களை தயாரிக்க ஆரம்பித்தது. இதற்காக முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை முருகதாஸ் தொடங்கினார். 2011-ல் இவர்கள் கூட்டுத் தயாரிப்பில் ’எங்கேயும் எப்போதும்’ படம் தயாரானது. முருகதாஸின் உதவி இயக்குனர் சரவணன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். படம் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து, தனது தம்பி திலீபனை நாயகனாக்கி ’வத்திக்குச்சி’ படத்தை முருகதாஸ் தயாரித்தார். அது தோல்வியடைந்தது. அதன் பிறகு ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து ’ராஜா ராணி’, ’மான் கராத்தே’, ’பத்து எண்றதுக்குள்ள’, ’அகிரா’, ’ரங்கூன்’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மற்றவை தோல்விப் படங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை முருகதாஸ் தயாரிக்கிறார். இதில் சரத்குமார், சந்தீப் கிஷன் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். படத்தை எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்குகிறார். இவரது கடைசிப் படம் ராங்கி, த்ரிஷா நடித்தது. இதன் கதையை முருகதாஸ் எழுதியிருந்தார். லைகா தயாரித்த அப்படம் முடிவடைந்தும் இன்னும் வெளியாகவில்லை.

முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: AR Murugadoss, Tamil Cinema