முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / AR Murugadoss: ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்!

AR Murugadoss: ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - ராம்

ஏ.ஆர்.முருகதாஸ் - ராம்

மகேஷ்பாபு, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களை இயக்கியவர், ராம் போன்ற அதிக மார்க்கெட் வேல்யூ இல்லாத நடிகரை வைத்து படம் இயக்குவாரா?

  • 1-MIN READ
  • Last Updated :

கடந்த சில நாள்களாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் குறித்து பல்வேறு வதந்திகள் நிலவின. அதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் தர்பார். ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார். பாட்ஷா அளவுக்கு எதிர்பார்த்தது, பாபா அளவுக்கே இருந்தது. அதற்கு முன் விஜய்யை வைத்து அவர் இயக்கிய சர்கார் திரைப்படம் வணிக ரீதியாக தப்பித்தாலும் ரசிகர்களை கவரவில்லை. ரமணா, துப்பாக்கி போன்ற முருகதாஸின் 'பென்ச் மார்க்' படங்களின் அருகிலும் இவ்விரு படங்களும் வரவில்லை. அதற்கு முன்பு தமிழ், தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் தோல்வியடைந்தது. அதற்கு முன்னால், இந்தியில் இயக்கிய அகிரா. அதுவும் தோல்வி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருகாலத்தில் முருகதாஸ் என்றால் கால்ஷீட் தர முன்னணி நடிகர்கள் முண்டியடித்தனர். இப்போது கதை கேட்டு பிடித்தால் மட்டுமே கால்ஷீட் என்று காலம் மாறியுள்ளது. முருகதாஸ் பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் கேட்டும் அஜித் அவருக்கு கால்ஷீட் தருவதாக இல்லை. ரஜினியை வைத்து கடைசிப்படம் எடுத்த நிலையில், முருகதாஸுக்கு ஒருந்த ஒரே சாய்ஸ் விஜய். முருகதாஸ் சொன்ன கதையில் விஜய்க்கு திருப்தி இல்லை என்றும், தெலுங்கு நடிகர் ராமை வைத்து அவர் அடுத்தப் படத்தை இயக்குவதாகவும் கடந்த சில நாள்களாக செய்திகள் வருகின்றன. ஆனால், இது உண்மையா? மகேஷ்பாபு, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களை இயக்கியவர், ராம் போன்ற அதிக மார்க்கெட் வேல்யூ இல்லாத நடிகரை வைத்து படம் இயக்குவாரா?

இதற்கு நடிகர் ராமே பதிலளித்துள்ளார். அவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. லிங்குசாமியின் படத்தில் தான் தற்போது என்னுடைய முழுக்கவனமும் உள்ளது. இது முடிந்த பிறகே அடுத்தப் படம் குறித்து யோசிப்பேன் என, முருகதாஸ் அவரை இயக்குவதாக சொல்லப்பட்ட தகவலை மறுத்துள்ளார்.

இதன் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், முருகதாஸின் அடுத்த ஹீரோ யார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: AR Murugadoss