இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்தப் படத்துக்காக உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனமான பிரைம் ஃபோகஸுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
கமர்ஷியல் படங்களில் ரமணா, கஜினி, துப்பாக்கி என உச்சம் தொட்டவர் முருகதாஸ். தமிழில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா என முன்னணி நட்சத்திரங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு. இந்தியில் அமீர் கான். இதற்கு மேல் அவர் போவது என்றால் ஹாலிவுட்டில்தான் படம் இயக்க வேண்டும். தவிர அவரது சமீபத்திய கமர்ஷியல் படங்கள் ரசிகர்களை அத்தனை கவரவில்லை. குறிப்பாக தர்பார், சர்கார், ஸ்பைடர் படங்கள். இதனால், தனது ரூட்டை முதல்முறையாக மாற்றியிருக்கிறார்.
முருகதாஸ் அடுத்து கிங்காங் போன்று பிரமாண்ட கதாபாத்திரத்தை பின்னணியாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த மெகா கதாபாத்திரம் சிஜியில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். இதனை உருவாக்க டாலர்களில் பணம் வேண்டும். குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தில் அனுபவம் உள்ள நிறுவனம் முக்கியத்தேவை. இதற்காக பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் முருகதாஸ்.
பிரைம் ஃபோகஸ் நிறுவனம் விஎஃப்எக்ஸ் எனப்படும் விஷுவல் எஃபெக்ட்ஸில் உலகப்பிரசித்தம் பெற்ற நிறுவனம். 4 கண்டங்களில், 16 நகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. 8,000 பேர் பணிபுரிகிறார்கள். இவர்கள் தான் முருகதாஸின் புதிய படத்தின் தயாரிப்பில் கைகோர்த்திருக்கிறார்கள். இதற்கு முன் ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோசுடன் இணைந்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி போன்ற படங்களை முருகதாஸ் தயாரித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அதேபோல் ஒரு பிரமாண்ட நிறுவனம் முருகதாஸ் படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செலுத்த உள்ளது.
மிக விரைவில் முருகதாஸின் அடுத்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Murugadoss