Home /News /entertainment /

தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...?

தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...?

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

முருகதாஸ் இதற்கு முன் சிரஞ்சீவி, மகேஷ்பாபு ஆகியோரை வைத்து தெலுங்கில் படம் இயக்கியிருக்கிறார்.

  • News18
  • Last Updated :
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று கூறப்பட்டு, ஒருகட்டத்தில்அந்த செய்தி கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் அந்த செய்தி உயிர்பெற்றிருக்கிறது. இந்தமுறை உறுதியாக அந்த செய்தியை முன் வைக்கிறார்கள்.

அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. அதையடுத்து பொய்யாபட்டி ஸ்ரீனு இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அதையடுத்து 2022 கோடையில் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஏற்கனவே இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டதால், சில வாரங்களில் இந்த படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து கொரட்டல சிவா, பிரசாந்த் நீல் இருவர் இயக்கத்திலும் தலா ஒரு படம் நடிக்கிறார். இவர்களுடன் முருகதாஸின் பெயரும் தற்போது புதிதாக இணைந்திருக்கிறது. புஷ்பா இரண்டாம் பாகம் முடிந்ததும் முருகதாஸ் அல்லு அர்ஜுன் படத்தை தொடங்கலாம் என்கின்றன ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள்.

Also read... திருப்பதி கோயிலுக்குள் முத்தம் - நடிகை ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு...!

ஒருவேளை படப்பிடிப்பு தள்ளிப்போனால், அதற்குமுன் வேறொரு படத்தை முருகதாஸ் இயக்கவும் வாய்ப்புள்ளது. எனினும், அல்லு அர்ஜுனை அவர் இயக்குவது உறுதி என்கிறார்கள்

முருகதாஸ் இதற்கு முன் சிரஞ்சீவி, மகேஷ்பாபு ஆகியோரை வைத்து தெலுங்கில் படம் இயக்கியிருக்கிறார். அல்லு அர்ஜுன் படம் குறித்து இன்னும் சில தினங்களில் தெளிவான பதில் கிடைக்கக்கூடும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: A.R.murugadoss

அடுத்த செய்தி