முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கதை பிடித்துவிட்டது.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு ?!  விரைவில் அறிவிப்பு!

கதை பிடித்துவிட்டது.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு ?!  விரைவில் அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சிம்பு

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சிம்பு

Director AR Murugadoss | இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சிம்பு ஆகியோர் இரண்டு முறை சந்தித்து புதிய திரைப்படம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். 

  • Last Updated :
  • Chennai, India

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா  சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒரு பிராண ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் புதிய படத்திற்கு இணைவது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு முறை இருவரும் சந்தித்து பேசி இருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் உறுதியானால் அவர்கள் இணையும் படம் எனவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வரும் அனிமேஷன் திரைப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

Read More: ரூ.500 கோடி வசூலிக்குமா பொன்னியின் செல்வன்? தீபாவளி படங்களால் தியேட்டர் சிக்கல்!

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் படங்கள் ஏதும் இயக்காமல் இருக்கிறார் முருகதாஸ். இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிம்புவுக்கு பல மொழிகளில் இயக்க ஏதுவான கதை ஒன்றை கூறியதாக கூறப்படுகிறது. அந்த கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்துள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்புவின் ’பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்து வருகிறது. இந்த ஷெட்யூல் இந்த வார இறுதியில் முடிவு பெற்று படக்குழுவுக்கு தீபாவளி பிரேக் கொடுக்கப்படுகிறது.


top videos

    First published:

    Tags: AR Murugadoss, Simbu