Home /News /entertainment /

ஏப்ரல் 14 பீஸ்டுடன் மோத இருக்கும் இரண்டு திரைப்படங்கள்...!

ஏப்ரல் 14 பீஸ்டுடன் மோத இருக்கும் இரண்டு திரைப்படங்கள்...!

ஜெர்ஸி, கேஜிஎப் சாப்டர் 2

ஜெர்ஸி, கேஜிஎப் சாப்டர் 2

Beast: தமிழகத்தில் இவ்விரு திரைப்படங்களும் விஜயின் பீஸ்ட் படத்தை தாண்டி வசூலிக்க இயலாது என்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரம் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் பீஸ்ட் படத்தின் ஓட்டத்தை இந்தப் படங்கள் தடுக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
ஏப்ரல் 14 விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்துடன் மேலும் இரு முக்கிய திரைப்படங்கள் மோத உள்ளன.

சென்ற வருட இறுதியில் கொரோனா அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. இந்த நெருக்கடியில் முதலில் வெளியீட்டு தேதியை மாற்றி வைத்த திரைப்படம் ஷாகித் கபூர் நடித்த இந்தித் திரைப்படமான ஜெர்ஸி.

2021 டிசம்பர் 31 வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம்  கொரோனா பெரும் தொற்றால் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஜெர்ஸி திரைப்படத்தைதான் அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியாகும் என தற்போது அறிவித்துள்ளனர்.

அதே தேதியில் வெளியாகும் மற்றொரு திரைப்படம் கேஜிஎப் சாப்டர் 2. யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் சாப்டர் 1 மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கன்னட திரைப்படம் ஒன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் பெரும் பாய்ச்சலை காட்டியது இதுவே முதல் முறை.

இதன் இரண்டாம் பாகத்தை பாகுபலி இரண்டாம் பாகம் அளவுக்கு இந்தியா எதிர்நோக்குகிறது. அதற்கேற்ப படத்தில் வில்லனாக இந்தியின் பிரதான நடிகர்களில் ஒருவரான சஞ்சய் தத் நடித்துள்ளார். இந்தத் திரைப்படமும் ஏப்ரல் 14 திரைக்கு வருகிறது.

Also read... ராம் இயக்கத்தில் தனது 50-வது படத்தை நடிக்கும் சிம்பு...?

தமிழகத்தில் இவ்விரு திரைப்படங்களும் விஜயின் பீஸ்ட் படத்தை தாண்டி வசூலிக்க இயலாது என்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரம் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் பீஸ்ட் படத்தின் ஓட்டத்தை இந்தப் படங்கள் தடுக்க வாய்ப்புள்ளது. இதே ஏப்ரல் 14 வெளியாவதாக இருந்த அமீர் கானின்  லால் சிங் சத்தா ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெர்ஸி ஏப்ரல் 14 வெளியாக இதுவும் ஓர் முக்கிய காரணம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Beast

அடுத்த செய்தி