கொரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியில் அப்புக்குட்டி

அப்புக்குட்டி

தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு அருகே உள்ள நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் அப்புக்குட்டி.

 • Share this:
  கொரோனா இரண்டாம் அலையால் நடிகர் அப்புக்குட்டி கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

  தமிழ் சினிமாவில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அப்புக்குட்டி. இவர் ஹீரோவாக நடித்த 'அழகர்சாமியின் குதிரை' படம் தேசிய விருது பெற்றது. இந்த விருது தனக்கு நிறைய படவாய்ப்புகளை வாங்கி தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நிஜத்தில் அவர் நினைத்தது நடக்கவில்லை.

  தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு அருகே உள்ள நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் அப்புக்குட்டி. முதலில் சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்புக்குட்டி, இப்போது கோவூரில் வசிக்கிறார். இதுவும் வாடகை வீடுதான்.

  சொந்த வீடு வாங்குவதற்கு வசதியில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் அப்புக்குட்டி, இந்த கொரோனா இரண்டாம் அலையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: