Sasi Kumar: சசிகுமாருக்கு வில்லன் - அசத்துவாரா அப்பானி சரத்?

Sasi Kumar: சசிகுமாருக்கு வில்லன் - அசத்துவாரா அப்பானி சரத்?

சசிகுமார் - அப்பானி சரத்

கழுகு சத்ய சிவா அடுத்து சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

  • Share this:
    சண்டக்கோழி 2, செக்கச் சிவந்த வானம் படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் அப்பானி சரத். இவர் சசிகுமாரின் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார்.

    அப்பானி சரத் மலையாள இளம் நடிகர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். உண்மையான பெயர் சரத்குமார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய அங்கமாலி டயரிஸ் படத்தில் அப்பானி என்ற வேடத்தில் நடித்தார். அதுதான் முதல் படம். அப்பானி வேடத்தில் மலையாளிகள் அனைவர் மனதிலும் ஆழப்பதிந்தார். அதன் பிறகு அவரை யாரும் சரத்குமார் என்று அழைக்கவில்லை. அப்பானி சரத் என பெயர் மாறியது. அப்படி விளித்தால்தான் இப்போது அவர் குடும்பத்துக்கே தெரியும்.

    முதல் படம் தந்த வெளிச்சத்தில் தமிழில் சண்டக்கோழி 2, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தார். மனதில் தங்காத வேடங்கள். அதனால், மலையாளப் படத்தைச் சொல்லியே அவரை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. ஸீ 5 இல் வெளியான ஆட்டோ சங்கர் வெப் சீரிஸிலும் அப்பானி சரத் நடித்திருந்தார்.

    கழுகு சத்ய சிவா அடுத்து சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அதில் வில்லனாக நடிக்க அப்பானி சரத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழில் கிடைத்திருக்கும் முதல் வலுவான வேடம். அப்பானி அசத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இது தவிர, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் நடிக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

    திறமை திருவனந்தபுரத்தில் இருந்தாலும் வாய்ப்பு தேடி வரும் என்பதற்கு அப்பானி சிறந்த உதாரணம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: