காஷ்மீர் ஃபைல்ஸ்- திரைப்படம் குறித்து இத்தாலிய திரைப்பட இயக்குநர் நடாவ் லேபிட் கூறிய விமர்சனம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதன் நிறைவு விழாவில் இஸ்ரேலிய திரைப்பட இயக்குநர் நடாவ் லேபிட் கலந்து கொண்டு பேசினார். இந்த திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களையும், நடிகர் மற்றும் நடிககைளையும் தேர்வு செய்யும் நடுவர்கள் குழுவின் தலைவராகவும் அழைக்கப்பட்டிருந்தார் நடாவ் லேபிட்.
அவர் நிறைவு விழாவில் பேசும் போது, இந்திய திரைப்படமான காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து பேசியிருந்தார். விவேக் அக்னிகோத்ரி இயக்கியிருந்த அந்த திரைப்படத்தில் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீரி பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கப்பட்டிருக்கும். இது தொடர்பாக நடாவ் கூறியுள்ள கருத்துகள் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்.. நடிகை மேகா ஆகாஷின் அழகிய படங்கள்...
இந்த திரைப்படம் ஒரு பொய்பிரச்சாரம் என்றும், வன்மம் நிறைந்த திரைப்படம் என்றும் கூறியிருந்தார். நடாவின் இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக தனது கண்டத்தை பதிவு செய்துள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கேர், எனது கடவுள் அவருக்கு ஞானத்தை கொடுக்கட்டும் எனக் கூறியுள்ளார்.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் “உங்கள் மதிப்புரை எங்களுக்கு தேவையில்லை.அதன் வலியை அனுபவித்த ஆயிரக் கணக்கான மக்களை கடந்து தான் நாங்கள் வந்திருக்கிறோம்… எனக் காட்டமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அரசியல் உள்நோக்கோடு இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
An open letter to #NadavLapid following his criticism of #KashmirFiles. It’s not in Hebrew because I wanted our Indian brothers and sisters to be able to understand. It is also relatively long so I’ll give you the bottom line first. YOU SHOULD BE ASHAMED. Here’s why: pic.twitter.com/8YpSQGMXIR
— Naor Gilon (@NaorGilon) November 29, 2022
“உங்கள் பேச்சிற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் நோர் கிலான், இது ஹீப்ரு மொழியல்ல… இந்திய சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். நீங்கள் வெட்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விருந்தினர்களை கடவுளாக கருதும் இந்தியாவின் மேன்மையான அழைப்பை நடாவ் சீரழித்துவிட்டதாகவும் கிலோன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கை, மரியாதை மற்றும் விருந்தோம்பலின் மேன்மை என அனைத்தையுமே நீங்கள் கெடுத்துவிட்டீர்கள் எனவும் கிலோன் சாடியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Goa Film Festival, IFFI, The Kashmir Files