முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மேடையில் அத்துமீறிய ரசிகர்.. விலகி ஓடிய சூரரைப்போற்று நடிகை.. வலுக்கும் கண்டனம்!

மேடையில் அத்துமீறிய ரசிகர்.. விலகி ஓடிய சூரரைப்போற்று நடிகை.. வலுக்கும் கண்டனம்!

அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளி

மேடையில் இருந்த கல்லூரி நிர்வாகிகள் யாரும் மாணவரின் நடத்தையை கண்டிக்கவில்லை.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கல்லூரி விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் அத்துமீறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அபர்ணா பாலமுரளி, தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்களில் நடித்தவரை வெளியில் தெரியாமல் இருந்த அபர்ணா பாலமுரளி, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்படித்தார். இந்தப் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். பின்னர் ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மலையாளத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட தங்கம் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சட்டக் கல்லூரியில் நடந்த அந்த நிகழ்வில், அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அவர், பின்னர் அபர்ணாவை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார் அந்த மாணவர்.

கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துக் கொண்ட மாணவர் - வைரலாகும் வீடியோ

அவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, அங்கிருந்து விலகினார். அதே நேரத்தில், மேடையில் இருந்த கல்லூரி நிர்வாகிகள் யாரும் மாணவரின் நடத்தையை கண்டிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அபர்ணாவுக்கு ஆதரவும், மாணவருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனமும் வலுத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Aparna Balamurali