ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்பு பட வில்லனுக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி!

சிம்பு பட வில்லனுக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி!

நீரஜ் - அபர்ணா

நீரஜ் - அபர்ணா

நீரஜ் மாதவ் மலையாளத்தின் வளர்ந்துவரும் வரும் நடிகர். காமெடி, குணச்சித்திரம் என அனைத்து வித கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம், சூரரைப் போற்று படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி மலையாளப் படமொன்றில் நீரஜ் மாதவ்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

அபர்ணா பாலமுரளியின் முதல் படம் பகத் பாசில் நடிப்பில் தில்லீஷ் போத்தன் இயக்கிய மகேஷின்டெ பிரதிகாரம். தில்லீஷ் போத்தனின் முதல் படம் இது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம், தமிழில் பல படங்களில் நடித்தார் அபர்ணா. இப்போது நீரஜ் மாதவ் ஜோடியாக சுந்தரி கார்டன்ஸ் என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

நீரஜ் மாதவ் மலையாளத்தின் வளர்ந்துவரும் வரும் நடிகர். காமெடி, குணச்சித்திரம் என அனைத்து வித கதாபாத்திரங்களிலும் நடிப்பவர். தி பேமிலி மேன் முதல் சீஸனில் இவர் தான் பிரதான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவரை வில்லனாகவும் பார்க்க ஆரம்பித்தனர். சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிவரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நீரஜ் மாதவ் வில்லனாக நடிக்கிறார்.

ஒருபுறம் வில்லன், குணச்சித்திரம் என நடித்துக் கொண்டே நாயகனாகவும் நடிக்க உள்ளார் நீரஜ். சுந்தரி கார்டன்ஸ் படத்தில் இவர் தான் நாயகன், நாயகி அபர்ணா பாலமுரளி. சார்லி டேவிஸ் எழுதி இயக்கும் இந்தப் படத்தை சலீம் அஹமது தயாரிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Aparna Balamurali