‘சூரரைப்போற்று’ பொம்மி கேரக்டர் உருவான விதம் - வீடியோ

சூரரைப்போற்று திரைப்படத்தின் ‘பொம்மி’ கேரக்டர் உருவான விதம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. ஏர்டெக்கன் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான, கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரிலும், அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஒருபக்கம் தனது திறமையான நடிப்பால் சூர்யா, ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்க, அவருக்கு ஜோடியாகவும், தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப் பெண் கதாபாத்திரம் போன்று இல்லாமலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் பொம்மியாக அபர்ணா பாலமுரளி. படத்தின் இயக்குநர் அபர்ணா பாலமுரளி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ஆணாதிக்க சமூகம் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை தனது நடிப்பால் சாத்தியப்படுத்தி, சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்துள்ளார்.

சூர்யாவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாமல் அபர்ணா பாலமுரளியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சிலர் ஒருபடி மேலேபோய் இப்படி ஒரு பெண் தன் வாழ்க்கையில் வர வேண்டும் என்று நினைப்பதை சமூகவலைதள பதிவுகளின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.


இந்நிலையில் அபர்ணா பாலமுரளி ஏற்று நடித்திருந்த பொம்மி கதாபாத்திரம் உருவான விதம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், அபர்ணா பாலமுரளி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன் என்று ஷூட்டிங் செல்லும் வரை எனக்கு உறுதி செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார் அபர்ணா.

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா கூறுகையில், இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று நாங்கள் தனியாக நடத்தவில்லை. எல்லோரையும் சரிசமமாகத் தான் நடத்தினோம். 90-களில் இருக்கும் ஒரு பெண் தான் பொம்மி கேரக்டர். அப்போதே அந்தக் கதாபாத்திரம் ஒரு தொழில் முனைவோராக இருக்கும்.” என்றும் அந்தக் கதாபாத்திரத்துக்கு கொடுத்த உடைகள் பற்றியும் விளக்கியுள்ளார்.

அபர்ணா பாலமுரளி கூறுகையில், “மற்ற படங்களில் நான் நடித்ததை விட இதில் ஸ்கிரிப்ட் ரீடிங் இருந்தது. மொழி உச்சரிப்பு சரிபார்ர்த்தோம். அந்தக் கேரக்டரில் நடிக்க சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.
First published: November 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading