ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திரைத்துறையில் பெண் கலைஞர்கள்.. கைத்தட்டல்களை வாங்கிய விஜய் ஆண்டனியின் பேச்சு

திரைத்துறையில் பெண் கலைஞர்கள்.. கைத்தட்டல்களை வாங்கிய விஜய் ஆண்டனியின் பேச்சு

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

இந்த துறையில் பெண்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது என விஜய் ஆண்டனி பேசியுள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திரைத்துறைக்கு பெண் கலைஞர்கள் வருவதை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு ஆஹா ஓ.டி.டிக்காக Anya's Tutorial என்ற இணையத் தொடரை தயாரித்துள்ளார். ஜூலை 1-ம் தேதி வெளியாகவுள்ள அந்த தொடர் இரண்டு பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சவுமியா என்பர் கதை எழுதியுள்ளார். அதேபோல் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடன் முதன்மை உதவி இயக்குநராக பணியாற்றிய பல்லவி என்பவர் இயக்கியுள்ளார்.

அஜித்தின் ஏகே 61 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

ஹாரர் த்ரில்லர் வகையில் உருவாகியிருக்கும் Anya's Tutorial தொடருக்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகைகள் ரெஜினா, நிவேதா சதீஷ் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர். அதேபோல் இயக்குனர்கள், சுந்தர்.சி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதில் பேசிய விஜய் ஆண்டனி, பெண் கலைஞர்கள் திரைக்கு வருவதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த தொடர் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று தோன்றுகிறது என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பல்லவியை ஸ்பைடர் படத்தில் இருந்தே தெரியும். மிகவும் திறமைசாலி, இவர் படம் இயக்குக வேண்டும் என ஆசைப்பட்டேன், பல முறை கேட்டு கொண்டே இருந்தேன். தற்போது பல்லவி இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என எஸ்.ஜே. சூர்யா தெரிவித்தார்.

கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?

இறுதியாக பேசிய சுந்தர்.சி, ஓ.டி.டி வருகையால் ஏராளமான இணையத் தொடர்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் நானும் ஆஹவுடன் இணையத்தொடருக்காக இணைவேன் என தெரிவித்தார். ஹாரர் த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் Anya's Tutorial தொடர் 7 பகுதிகளாக உருவாகியுள்ளது. இந்த தொடர் வரும் ஜூலை  1-ம் தேதி வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kollywood, SJSurya, Tamil Cinema, Vijay Antony