Home /News /entertainment /

இயக்குநரை மணக்கிறாரா நடிகை அனுஷ்கா?

இயக்குநரை மணக்கிறாரா நடிகை அனுஷ்கா?

அனுஷ்கா ஷெட்டி.

அனுஷ்கா ஷெட்டி.

தற்போது 39 வயதாகும் அனுஷ்கா தன்னுடன் நடித்த பிரபாஸுடன் காதல் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    நடிகை அனுஷ்கா தெலுங்கு இயக்குநர் ஒருவரை மணக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதோடு அருந்ததி, ருத்ரமாதேவி என பெண்ணை முக்கியத்துவம் படுத்திய கதைகளில் நடித்தார். இந்த மாதிரி கதைகளில் நடிக்க மற்ற நடிகைகளுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார் அனுஷ்கா.

    பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தார். தற்போது 39 வயதாகும் அனுஷ்கா தன்னுடன் நடித்த பிரபாஸுடன் காதல் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இதை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

    இதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரை மணக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதோடு தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதையெல்லாம் மறுத்த அனுஷ்கா, “எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்” என்றார்.

    இந்நிலையில் தற்போது அவர் தெலுங்கு இயக்குநர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. இது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Anushka

    அடுத்த செய்தி