கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினம் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மருத்துவர்கள், பிரபலங்கள் தருகிற நம்பிக்கை வார்த்தைகள் மக்களை ஆசுவாசப்படுத்துகின்றன. இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி கொரோனா குறித்து பொதுமக்களுக்கு செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"இது சோதனையான காலகட்டம். இதிலிருந்து மீள ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். அனைவரும் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளை கடைபிடியுங்கள், சுய ஊரடங்கை நடைமுறை படுத்துங்கள், தினம் ஒரு நல்ல விஷயத்தை பகிருங்கள், எதிர்மறையாக சிந்திக்காதீர்கள், உங்களுக்கு தெரிந்த பிரார்த்தனைகளை செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.
அனுஷ்கா, யோகா டீச்சராக இருந்து நடிகையானவர். அந்த அனுபவத்தில், தினம் மூச்சுப் பயிற்சி செய்யுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். "மனிதர்களின் வலிமையை ஒன்றிணைத்து இதிலிருந்து மீண்டு வருவோம். அனைவருக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்" என்று கூறியுள்ளார்.
அனுஷ்காவை போன்றே பல திரைநட்சத்திரங்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகை தாப்ஸி, ட்விட்டரில் தன்னிடம் உதவி கேட்கும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறார். மாறாக, மக்களுக்கு உதவி செய்யும்
சோனு சூட் போன்ற
நட்சத்திரங்களை அவதூறாக பேசி வந்த கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக மூடியுள்ளது. கங்கனா போன்ற எதிர்மறை நபர்கள் மீதான இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.