Home /News /entertainment /

அனுஷ்காவின் ‘நிசப்தம்’ அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.. ரிலீஸ் தேதி அறிவிப்பு...

அனுஷ்காவின் ‘நிசப்தம்’ அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.. ரிலீஸ் தேதி அறிவிப்பு...

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா நடித்துள்ள 'நிசப்தம்' அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளது.

    ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சைலன்ஸ். தமிழில் நிசப்தம் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

    கோனா வெங்கட் மற்றும் கோபி மோகன் இணைந்து கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தில் மாதவன், அனுஷ்கா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. படம் முழுக்க வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் ரிலீசாகாமல் இருந்த இத்திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.26 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால் ஆரம்பத்தில் படக்குழு இதை மறுத்திருந்த நிலையில் இறுதியாக சில நாட்களுக்கு முன்னர் படத்தின் ஓடிடி ரிலீஸை படக்குழு உறுதி செய்தது. இந்நிலையில் தற்போது அக்டோபர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ‘நிசப்தம்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஏற்கெனவே நானி நடிப்பில் ‘வி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அடுத்து வெளியாக இருக்கும் ‘நிசப்தம்’ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actress Anushka, Kollywood, Tollywood

    அடுத்த செய்தி