• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சந்திரமுகியாக திரும்பவரும் அனுஷ்கா...?

சந்திரமுகியாக திரும்பவரும் அனுஷ்கா...?

அனுஷ்கா ஷெட்டி.

அனுஷ்கா ஷெட்டி.

Anushka Shetty: சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அனுஷ்காவை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அனுஷ்கா தமிழ் சினிமாவில் நடித்து நான்கு வருடங்களாகிறது. தெலுங்கு சினிமாவிலும் கிட்டத்தட்ட இதுதான் நிலை. அனுஷ்கா எப்போது மீண்டும் தமிழில் நடிப்பார் என காத்திருந்த அனுஷ்கா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. பிரபல இயக்குனர் தனது படத்தில் நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

அனுஷ்காவை கடைசியாக சிங்கம் 3 படத்தில் பார்த்தது. அந்தப் படம் 2017 இல் வெளியானது. அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் அவர் திரும்பவில்லை. உடல் பருமன் அதிகரித்தது முக்கிய காரணம். தெலுங்கில் நவீன் பொலிஷெட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் அனுஷ்கா நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால், அந்தப் படம் குறித்து இதுவரை அறிவிக்காமல் இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் பி.வாசு தனது படத்தில் நடிக்க அனுஷ்காவை கேட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.வாசு தமிழில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். ரஜினியை வைத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பதே அவரது ஆசை. சந்திரமுகி ஒரு கிளாஸிக் ஹிட். இரண்டாம் பாகம் எடுத்து அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என இரண்டாம் பாகத்துக்கு நோ சொல்லி அப்போதே ரஜினி விலகிக் கொண்டார். ஆனால், பி.வாசுவுக்கு இரண்டாம் பாகம் எடுக்க பேராவல். ராகவா லாரன்ஸை வைத்து படத்தின் ப்ரீபுரொடக்ஷனை ஆரம்பித்துள்ளார்.

Also read... புத்தி இல்லையா...? - செய்தியாளரை சாடிய சமந்தா!

இந்தப் படத்தில் நடிக்க அவர் அனுஷ்காவை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள். பல வருட இடைவெளிக்குப் பின் சந்திரமுகியாக அனுஷ்காவின் ரீஎன்ட்ரி அமைந்தால் சிறப்பாகத்தான் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: