Home /News /entertainment /

விஜய் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அனுஷ்கா?

விஜய் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அனுஷ்கா?

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி

பெண்களை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறதாம். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

    நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் மீண்டும் ஹீரோயினாக கம்பேக் தரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தெலுங்கு திரையுலகில் ‘அருந்ததி’, ‘தேவசேனா’ என பல வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை சம்பாதித்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, பல வருடங்களாக நேரடி தமிழ் படத்தில் நடிக்காமல் இருக்கிறார். இப்போது 39 வயதான அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதாவது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் அனுஷ்கா. பெண்களை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறதாம். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

    பிரிவுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... என்ன நடந்தது?

    அனுஷ்கா ஷெட்டி ஏற்கனவே ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து ‘தெய்வ திருமகள்’ மற்றும் ’தாண்டவம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருப்பதால், இந்த கூட்டணி ரசிகர்களின் மனதில் இன்னும் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூறிய இரண்டு படங்களிலும் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் தற்போது ஏ.எல்.விஜய் - அனுஷ்கா இணையும் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Actress Anushka

    அடுத்த செய்தி