Home /News /entertainment /

மேட்சின் போது வெளியான அனுஷ்கா சர்மா-விராட் கோலி மகள் வாமிகாவின் படம் - கோபத்தில் ரசிகர்கள்

மேட்சின் போது வெளியான அனுஷ்கா சர்மா-விராட் கோலி மகள் வாமிகாவின் படம் - கோபத்தில் ரசிகர்கள்

மகளுடன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா

மகளுடன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா

இதற்கு முன்பு வாமிகாவின் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டபோது, ​​அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் முகம் மறைக்கப்பட்டிருந்தது.

    நேற்று நடந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியின் போது விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் மகள் வாமிகாவின் முகம் தற்செயலாக கேமராவில் பட, அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதே நேரத்தில் கோபமடைமைந்த விராட் - அனுஷ்கா ரசிகர்கள் அந்தப் படங்களை நீக்கக்கோரி வலியுறுத்தினர்.

    இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நேற்று விளையாடியது. இதையடுத்து கோலிக்கு தனது ஆதரவைக் காட்ட வாமிகாவுடன் போட்டியை நேரில் பார்த்தார் அனுஷ்கா.

    கிரிக்கெட் ஒளிபரப்பின் போது, வாமிகாவை வைத்துக் கொண்டு கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அனுஷ்காவை ஃபோகஸ் செய்தது கேமரா. சுமார் பத்து வினாடிகள் நீடித்த அந்த ஷாட், வாமிகாவின் முகத்தை ரசிகர்களுக்குக் காட்டியது. மேட்சின் போது டிவி-யில் வாமிகாவின் முகம் காட்டப்பட்டதால், ட்விட்டரில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர் ரசிகர்கள்.

    இதற்கு முன்பு வாமிகாவின் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டபோது, ​​அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் முகம் மறைக்கப்பட்டிருந்தது. அவரின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இவ்வாறு செய்யப்பட்டது.

    சமீபத்தில் இது குறித்து பதிவிட்டிருந்த அனுஷ்கா, “வாமிகாவின் படங்கள்/வீடியோக்களை வெளியிடாத பெரும்பாலான இந்திய ஊடகங்களுக்கு நாங்கள் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் எங்கள் குழந்தைக்கு தனியுரிமையைத் தேடுகிறோம். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி அவளது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ, அவளுக்கு வாய்ப்பளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். அவள் பெரியவளாகிவிட்டால், அவளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது, எனவே இப்போது உங்கள் ஆதரவு தேவை. எனவே தயவுசெய்து இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். படங்களை பதிவிடாமல் இருந்த ரசிகர்களுக்கும் இணைய மக்களுக்கும் சிறப்பு நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் எதிர்பாராத விதமாக டிவி-யில் வெளியான வாமிகாவின் படம், விராட் - அனுஷ்கா ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. ஆகையால் படங்களை இணையத்திலிருந்து நீக்கும்படி அவர்கள் பயனர்களை வலியுறுத்தி வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Anushka Sharma, Virat Kohli

    அடுத்த செய்தி